ரஜினிகாந்த நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் காலா. தனுஷ் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கியுள்ளார்.ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின் வெளியாகும் முதல் படம் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கலெக்சனிலும் ரஜினி படங்களிலேயே மிகவும் குறைவாகவே உள்ளது என்று கூறப்பட்டது. மேலும் காலா ஒரு தோல்வி படம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.*

இதையும் படிங்க பாஸ்-  பிரபல இயக்குனர் மீதும் பாலியல் புகார் கூறும் தனுஸ்ரீ தத்தா

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் கூறுகையில், காலா படம் எடுத்ததே சிறு பட்ஜெட்டில் தான் அந்த வகையில் தனுஷ் இப்படத்தை மினிமம் கேரண்டியில் விற்கவில்லை. எந்த விநியோகஸ்தர்களும் கஷ்டப்பட கூடாது என்று குறைந்த விலைக்கு தான் விற்றோம், வசூல் குறைவு என்றாலும் யாருக்குமே நஷ்டம் இல்லை, சேலத்தில் தான் ஒரு திரையரங்க உரிமையாளர் எங்களுக்கு இனி லாபம் தான் என்று குறிப்பிட்டார், அதனால், காலா வெற்றிப்படம் தான் என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  அவமானத்தால் கத்திய ரஜினி; விமான நிலையத்தில் பரபரப்பு!