காலா ரிலீஸ் தேதி தனுஷ் அறிவிப்பு

இயக்குநா் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படத்தின் ரீலிஸ் தேதியை 7மணிக்கு வெளியாகும் என்று தனுஷ் தனது ட்வீட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது அவருடைய ரசிகா்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கபாலி படத்தின் வெற்றிக்கு பின் இயக்குநா் பா.ரஞ்சித் மற்றும் ரஜினி கூட்டணி இரண்டாவது முறையாக இணையும் படம் காலா. இந்த படத்தை தனுசின் வெண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் 2.0 படம் வெளியான பிறகு தான் 2.0 படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருவதால் காலதாமதம் ஆகிற காரணத்தால் முன்னாடியே காலா படம் வெளியாக இருக்கிறது. .

ஏற்கனவே காலாபடம் ஏப்ரல் மாதம் 14ம் தேதி புத்தாண்டுக்கு வெளிவர அதிகவாய்ப்பு இருக்கிறது என்ற செய்திகள் வெளியாகின. ஆனால் தனுஷ் ட்விட்டரில் காலா படத்தின் அதிகாரப்பூா்வ ரிலீஸ் தேதியை அறிவிக்கிறேன் என ட்வீட்டினார். ஏப்ரல் 27ம் தேதி அன்று காலா படம் வெளியாகும் என்று தனுஷ் தனது ட்விட்டா் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.