பொதுவாக ரஜினி படங்கள் என்றால் மூன்று மணி நேரத்திற்கு குறைவில்லாமல் இருக்கும் என்பது தெரிந்ததே. ரஜினி படம் என்றாலே நேரம் போவதே தெரியாமல் அனைவரும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை படக்குழுவினர்களுக்கு இருந்தது உண்டு

இந்த நிலையில் வரும் ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள ரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் 165 நிமிடங்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதற்கு முந்தைய ரஜினி படமான ‘கபாலி’ படத்தை விட இந்த படம் 12 நிமிடங்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹூமாகுரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டேல், சுகன்யா, உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. முரளி ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.