திரைப்படத்துறையின் ஸ்டிரைக் காரணமாக புதிய படங்கள் ஏதும் வெளியாகமல் இருந்து வந்தது. இதனால் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான காலா படமானது சினிமாத்துறையின் போராட்டத்தால் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகா் தனுஸ் காலா படத்தின் பாடல் மே 9ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் ரசிகா்களுக்கு சர்ப்ரைஸ் விருந்தாக தனுஷ் இந்த படத்தின் சிங்கிள் டிராக் மே தினமான நாளை மாலை 7மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித், ரஜினி கூட்டணி கபாலி வெற்றியை தொடர்ந்து இணையும் இரண்டாவது படம் காலா. இந்த படமானது ஜூன் மாதம் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் மே 9ம் தேதி வெளியாகும் என இதன் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார். தற்போது இந்த படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை கேட்ட ரசிகா்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனா். கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் காலா படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். கபாலி படத்தின் பாடல் ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை போல காலா படத்தின் பாடல்களும் வெற்றி பெறும்.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு செம்ம வெய்ட்டு என தொடங்கும் சிங்கிள் டிராக் நாளை வெளியிடப்படுகிறது. நாளை மாலை 7 மணிக்கு இந்த வீடியோ வெளியிடப்படும் என காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகா்கள் இசை கொண்டாட்டத்திற்கு ரெடியாகி விட்டனார். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. காலா படத்தில் ஈஸ்வரிராவ், ஹூமாகுரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.