சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ படத்தின் சிங்கிள் பாடலான ‘செம வெயிட்டு’ என்ற பாடல் நேற்றிரவு 7 மணிக்கு யூடியூப் இணையதளத்தில் வெளியானது

சந்தோஷ் நாராயணன் இசையில் அருண்காமராஜ் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் 12 மணி நேரத்தில் ஒரு மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை பெற்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த பாடலுக்கு 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளது.

இந்த படத்தின் மற்ற பாடல்கள் வெளியான இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் அந்த பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.