சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் 14 வினாடி சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

14 வினாடிகள் மட்டுமே அடங்கிய அந்த லீக் வீடியோவில் ரஜினிகாந்த் தன்னை அடிக்க வரும் வில்லன் ஒருவரை, உதைப்பது போன்றும் அதன் பின்னணி நெருப்பு எரிவது போன்றும் உள்ளது.

காலா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு டீசர் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இணையத்தில் லீக் ஆன காட்சி தயாரிப்பாளர் தனுஷை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.