சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் பணிகள் தயாராகிவிட்டதாகவும், மிக விரைவில் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்

இந்த நிலையில் சற்றுமுன்னர் ‘காலா’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், தனது டுவிட்டரில் ‘காலா’ திரைப்படத்தின் டீசர் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த டீசரில் “ இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! “ என்ற வசன வரியையும் அவர் பதிவு செய்துள்ளதால் டீசருக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ‘கபாலி’ படத்தில் நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்ற பஞ்ச் போல் இந்த பஞ்ச்சும் பற்றியெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது