சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்காத்துடன் இன்று ‘காலா’ டீசரை வரவேற்க தயாராக இருந்தனர்.

இந்த நிலையில் தனுஷ் இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதியை ஒத்திவைத்துள்ளதாக எறு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யா அவர்களின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ‘காலா’ படத்தின் டீசர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறது. இந்த டீசர் மார்ச் 2ஆம் தேதி வெளியாகும். ‘காலா’ டீசரை காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களிடம், இந்த தள்ளிவைப்புக்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். தனுஷின் இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது