சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் வரும் ஜூன் 7 முதல் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இன்று தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.

இந்த டிரைலரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

குறிப்பாக, நிலம் உனக்கு அதிகாரம், எங்களுக்கு வாழ்க்கை என்று பேசும் வசனமும், நமக்கு இந்த உடம்புதான் ஆயுதம் என்ற வசனமும் பெரும்புகழை பெற்று வருகிறது.

மும்பை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவனாக ரஜினி நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்