‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கிய உதயநிதி ஸ்டாலின் மனைவி, கிருத்திகா உதயநிதி, அந்த படம் கொடுத்த வெற்றியை அடுத்து விஜய் ஆண்டனி நடித்து வந்த ‘காளி’ என்ற படத்தை இயக்கி வந்தார்

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் இந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதனை கிருத்திகா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தை தயாரித்துள்ளதோடு, இசையும் அமைத்துள்ளார் விஜய் ஆண்டனி. வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்