விவேகம் இடைவெளியின்போது மின்சாரம் பாயும்: கபிலன் வைரமுத்து

தல அஜித்தின் ‘விவேகம்’ படத்தை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படம் குறித்து ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியவரும், படத்தின் திரைக்கதையில் பங்கு கொண்டவருமான கபிலன் வைரமுத்து இந்த படம் குறித்து சில கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

‘விவேகம்’ படத்தின் இடைவேளை குறித்து கபிலன் கூறியதாவது: விவேகம் படத்தோட இடைவேளைக் காட்சியைப் பார்த்தப்போ, உடம்புல மின்சாரம் பாயுற மாதிரி இருந்தது’ என்று கூறினார். ஏற்கனவே அஜித்தின் ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’ படங்களில் இடைவேளை காட்சி அட்டகாசமாக இருந்த நிலையில் இந்த படத்தின் இடைவேளை காட்சியும் அசத்தலாக இருக்கும் என்று கபிலன் வைரமுத்து கூறுவதில் இருந்து தெரிகிறது.