விவசாயிகளின் வலி வேதனைகளை உள்ளடக்கி சுத்தமான விவசாய படமாக கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படம் வெளியானது. விவசாயம் மட்டுமல்லாது குடும்ப உறவுகளின் மேன்மையையும் இப்படம் சொல்லியது.

துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவை கூட இப்படம் வசீகரித்தது.

இப்படத்தின் 50 வது நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் தனது டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்தார்.

50வது நாள் 70 திரையரங்குகளில்

இன்னுமொரு நல்ல படைப்புடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன் இவ்வாறு தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.