கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்  வெளிவந்துள்ள கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

படத்தின் ரேக்ளா ரேஸ் காட்சிகள் மிக பிரமாண்டமாக தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளதாம் ரேக்ளா ரேஸ் காட்சிகள் இயக்குனர் பாண்டிராஜின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயம் அருகே எடுக்கப்பட்டதாம் ஒரிஜினல் ரேக்ளா ரேஸ் வீரர்கள் கொண்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

படத்தில் இந்த காட்சி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது மற்றும் ஊர் உறவு,குடும்பம் நகைச்சுவை என பல காட்சிகளும் விவசாயம் பற்றி கார்த்தி பேசும் வசனங்களும் பலரை ஈர்த்துள்ளதாக படம் பார்த்தவர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.

சிறந்த முறையில் படம் இருப்பதாக பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து சொல்லி வருகிறார்கள்.