Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கடைக்குட்டி சிங்கம் டிரெய்லர்

கடைக்குட்டி சிங்கம் டிரெய்லர்

கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் உருவாகி கொண்டிருக்கிறது. தற்போது அந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சயீஷா மற்றும் மேயாத மான் புகழ் ப்ரியா பவானி சங்கர் என இரு நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இதில் சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி, அர்த்தனா,பினு, மௌனிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி உள்ளது. இதில் கார்த்தி தான் ஒரு விவசாயி என்று பெருமையாக சொல்லும் வசனம் இடம் பெற்றுள்ளது. கிராமத்து கதையில் கார்த்தி அருமையாக நடித்து அசத்தியிருக்கிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.