காதல் படத்தில் ஒரு காமெடி காட்சியில் நடித்து பிரபலமானவர் நடிகர் பல்லு பாபு. இவரின் நிலைமை தற்போது பரிதாபகரமாக மாறியுள்ளது.

இப்படத்தில் இடம் பெறும் ஒரு நகைச்சுவை காட்சியில், ஒரு டூபாக்கூர் இயக்குனரிடம் நடிக்க வாய்ப்பு கேட்கும் வேடத்தில் இவர் நடித்திருப்பார். நடிகர் ரஜினி, கமல், அஜீத், விஜய் போல புகைப்படம் எடுத்து வைத்திருப்பார். அதில் விருச்சககாந்த்  என தனது பெயரை மாற்றி வைத்திருப்பார்.

மேலும், நடிச்சா ஹீரோ சார்.. நான் வெயிட் பண்றேன் சார்.. முதல்ல சினிமா.. அப்புறம் அரசியல்.. அப்புறம் பி.எம் என இவர் பேசும் வசனத்தை பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இந்நிலையில் இவரை ஒரு பேட்டியெடுக்க வேண்டும் என நிருபர் ஆசைப்பட்டுள்ளார். ஆனால், பாபுவை பற்றி எந்த தகவலும் யாருக்கும் தெரியவில்லை. ஒருவழியாக அவர் எழும்பூருக்கு அருகே உள்ள சூளை பகுதியில் இருப்பதாக தகவல் கிடைக்க அந்த நிருபர் அங்கு சென்று அவரை தேடியுள்ளார்.

அப்போது ஒரு கோவில் பக்கத்தில் அவர் பிச்சை எடுத்து பொழப்பு நடத்தி வருவதை பார்த்ததும் அந்த நிருபர் அதிர்ச்சியடைந்தார். தனது பெற்றோர்கள் இறந்துவிட்டதால் இந்த கோவிலுக்கு வந்துவிட்டேன். காதல் படத்திற்கு பின் நான் வாய்ப்பு தேடி அலையவில்லை. சில படங்களில் மட்டும் நடித்தேன். இந்த கோவிலில் சாப்பாடு கொடுக்கிறார்கள். வந்து போகிறவர்கள் காசு கொடுக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும், அவரது பேச்சின் மூலம் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

பேட்டி எடுக்க சென்ற நிருபர் பல்லு பாபுவின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மனவேதனையோடு திரும்பியிருக்கிறார்.