Home சற்றுமுன் பூனையை குறுக்கே விட்ட மன்சூர் அலிகான்

பூனையை குறுக்கே விட்ட மன்சூர் அலிகான்

பிரபல நடிகர் மன்சூர் அலிகான் ஆரம்ப காலத்தில் விஜயகாந்தின் படங்களில் நடித்து புகழ்பெற்றார். கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் நடித்த வீரபத்திரன் கதாபாத்திரம் புகழ்பெற்றது.

சமீப காலமாக சர்ச்சையான கருத்துக்களை அரசுக்கு எதிராக கூறி போலீஸ் ஸ்டேஷன் சென்று சமீபத்தில் சில நாட்கள் சிறை வாசம் அனுபவித்தார்.

சினிமா படப்பிடிப்பை வித்தியாசமாக நடத்துகிறேன் என தனது தயாரிப்பில் வந்த ஆரம்ப கால படங்கள் பூஜையின்போது பூனையை குறுக்கே விடுவது ,இராகுகாலத்தில் பூஜை போடுவது தனது படத்துக்கு சாதனை பெயராக ராஜாதி ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க காத்தவராய கிருஷ்ண காமராஜன் என பெரிய பெயர் வைத்தது என அமர்க்களப்படுத்துவார்.

இந்நிலையில் இவர் மகன் நடிப்பில் கடமான் பாறை என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார்

இது ஒரு மோசமான படம் என்று தான் நான் சொல்வேன். வேறு யாரையாவது நடிக்க வைப்பதற்கு பதிலாக எனது மகன் அலிகான் துக்ளக்கை நடிக்க வைத்துள்ளேன்.

படத்தில் நான் ஆதிவாசியாக நடிக்கிறேன். ஒரு காட்டையே எனது காட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூரப்பன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னை மீறி அந்த காட்டில் இருந்து யாராலும் எதுவும் செய்ய முடியாது.

அப்படியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்றார்.