Kaithi teaser video – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடித்துள்ள கைதி படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

மாநகரம் படம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்து இயக்கியுள்ள படம் கைதி. மாநாடு படம் போலவே இப்படமும் முழுக்க முழுக்க இரவில் நடைபெறுவது போலவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்தி, நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் கார்த்தி – வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்!

இந்நிலையில், கைதி படத்தின் டீசர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. சிறையில் இருந்து கார்த்தி உள்ளிட்ட சில கைதிகள் தப்பிப்பது போலவும், கார்த்திய கொலை செய்ய ஒரு கும்பல் துரத்தி வருவது போலவும் கதிகலங்க வைக்கும் காட்சிகள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க பாஸ்-  கார்த்தியுடன் கை கோர்க்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்