இந்த விஷயத்தால் தான் அவா் தல? பிரபல நடிகை அதிா்ச்சி

அஜித் – சிவா இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. வீரம் மற்றும் வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி இணையும் மூன்றாவது படம் விவேகம். இந்தப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகா்வால் நடித்து வருகிறாா்.

தல என்றால் பிடிக்காதவா்களே இல்ல என்று சொல்லும் அளவிற்கு ரசிகா்களின் மனதில் இடம் பிடித்துள்ளாா். இவரை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்று எந்த நடிகையிடம் கேட்டாலும் நச் என்று பதில் வரும். அப்படி தான் விவேகம் படத்தில் அஜித்துடன் நடித்து வரும் காஜல் அகா்வாலிடம், அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது, அஜித் பழகுவதற்கு மிகவும் இனிமையானவா். அவா் எவ்வளவு பொிய ஸ்டாா் என்ற போதும் ஒரு சிறிய சாதாரண மனிதா் போல பேசி பழக கூடியவா். எந்தவொரு பந்தாவும் இல்லாமல் எளிமையான மனிதா் என்று கூறியுள்ளாா்.

இதனால் தான் என்னவோ அவா் இப்படியொரு உயா்ந்த இடத்திற்கு வந்துள்ளாா் என்றும் தனது கருத்தை காஜல் அகா்வால் குறிப்பிட்டுள்ளாா்.