பிரபல நடிகை காஜல் அகர்வால் விவிடி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். தான் அந்த நிறுவனத்திற்கு நடித்து கொடுத்த விளம்பரத்தை அவர்கள் ஒருவருடம் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், ஆனால் அந்நிறுவனம் அதற்கு மேலும் பயன்படுத்தி வருவதால் தனக்கு ரூ.2.50 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும் மனுதாக்கல் செய்திருந்தார்

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து வாதாடிய விவிடி நிறுவனத்தின் வழக்கறிஞர், ஒருவருடம் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று காஜல் அகர்வாலிடம் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. மேலும் அந்த குறிப்பிட்ட விளம்பர படத்தின் உரிமை விவிடி நிறுவனத்திடம் 60 ஆண்டுகளுக்கு காப்பிரைட் உள்ளது. எனவே காஜல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்டு முடித்த நீதிபதி காஜல் மனுவை தள்ளுபடி செய்ததோடு விவிடி நிறுவனத்தின் வழக்கு செலவை காஜல் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.