பிரபல தென்னிந்திய நடிகை காஜல் அகர்வால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்று

இந்த நிலையில் நேற்று காஜல் அகர்வால் தனது பெற்றோருடன் திருப்பதி சென்றார். ஆனால் அவரை பார்த்தவுடன் ரசிகர்கள் முண்டியடித்து அவரிடம் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் சூழ்ந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருமலை போலீசார் உடனடியாக ரசிகர்களிடம் இருந்து காஜல் அகர்வாலையும் அவரது குடும்பத்தினர்களையும் காப்பாற்றி கோவிலின் உள்ளே பாதுகாப்பாக அழைத்து சென்ற்னர். தரிசனத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த காஜல், ‘மன ஆறுதலுக்காக குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தேன்” என்று கூறினார்