படம் வெளியாகும் போது பார்த்துக்கொள்ளுங்கள்-எஸ்கேப் ஆகும் காஜல்

காஜல் அகர்வால் தற்போது அஜித்துக்கு ஜோடியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம் விவேகம். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்ற போது சில முக்கிய போட்டோக்களை தனது வலைதலங்களில் வெளியிட்டு வந்தார்.

இதை அறிந்த சிறுத்தை சிவா காஜல் அகர்வாலிடம் இனிமேல் படம் குறித்து எந்த புகைப்படங்களையும் வெளியிட கூடாது என தடை போட்டிருக்கிறார்.அதனால் படம் கூறித்து எந்த ஒரு விஷயத்தையும் வெளியிடுவதில்லை.

இந்நிலையில் தற்போது விஜய்யின் 61-வது படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலிடம் படத்தை பற்றி எதாவது கேட்டால் எதுவும் பேசாமல் இருக்கிறராம். படம் வெளியாகும் போது பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி எஸ்கேப் ஆகிறாராம் காஜல் அகர்வால்.