ஏற்கனவே கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை பல நடிகைகள் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்ட நிலையில் வரும் மார்ச் 16ஆம் தேதி ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை நடிகை ஸ்ரேயா திருமணம் செய்யவுள்ளார்

இந்த நிலையில் பிரபல நடிகை காஜல் அகர்வாலும், மும்பை தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரேயே திருமணம் செய்ய அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

32 வயதாகும் காஜலுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். அவரது தங்கைக்கு திருமணமாகி குழந்தையும் பிறந்துவிடட்து. இந்த நிலையில் மும்பையில் உள்ள இளம் தொழில் அதிபர் ஒருவருக்கும் காஜல் அகர்வாலுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகி உள்ளன. இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் விரைவில் அந்த தொழில் அதிபரை அவர் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.