இந்தியன் 2 வில் நடிகர் கமலுக்கு ஜோடியாக காஜல் அகவர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘இந்தியன்’. இப்படத்தில் உலக நாயகன் இரு வேடங்களில் நடித்திருந்தார்.இப்படம் சூப்பர் ஹிட்டானது.இந்நிலையில் 22 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் 2-ஆம் பாகம் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தை ‘லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  விழா மேடையில் கன்னத்தில் முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்- அதிர்ச்சி அடைந்த காஜல்

இந்நிலையில் இந்தியன் 2 வில் கமலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.மேலும் இதனை ஹைதராபாதில் ஒரு படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட காஜல்,கமல்ஹாசன் உடன் நடிக்கபோவதாக உறுதி செய்தார்.