சினிமாவில் மற்ற துறைகளை போலவே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக விஜய், சூர்யா, கார்த்தி, ஆகியோர்கள் வாரிசு நடிகர்களே. இந்த நிலையில் வாரிசு நடிகர்கள் குறித்து பிரபல நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது:
பிறவியிலேயே யாரும் சினிமா நட்சத்திரம் ஆகிவிட முடியாது. வாரிசு நடிகர்-நடிகைகளுக்கு முதல் வாய்ப்புகள் வேண்டுமானால் எளிதாக கிடைக்கலாம். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து இருக்க முடியும். வாரிசு நடிகர்களாக வந்த பல நடிகர்கள் கஷ்டப்பட்டே முன்னேறி இருக்கிறார்கள்.
விஜய், சூர்யா, கார்த்தி, தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், நாகசைதன்யா, அல்லு அர்ஜுன், கல்யாண் ராம் உள்ளிட்ட பலர் வாரிசுகளாக இருந்தாலும் திறமையாலும் கடினமான உழைப்பாலுமே வளர்ந்துள்ளனர். உழைப்பையும் கஷ்டத்தையும் நம்பித்தான் அவர்கள் வேலை செய்கிறார்கள்.