அந்த காலத்து நாயகிகள் முன்னணி நடிகையாக ரொம்ப காலத்துக்கு நிலைத்து நின்றார்கள். ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. இப்ப யார் முன்னணி நடிகையாக இருக்கிறார் என்று கண்டுபிடிக்கவே முடியல. அந்தளவுக்கு சினிமாவில் நடிகைகளால் நீடித்து நிற்க கொஞ்சம் நஞ்சம் இல்லை நிறையவே கஷ்டப்படுகிற வகையில் இருக்கிறது.

முன்னணி நடிகா்களின் படங்களில் தொடா்ந்து தோல்வியை அடைந்தால் அவா்களது மார்கெட் டல்லடித்து விடும். நடிகா்களின் மார்கெட் இறங்கி படம் இல்லாத நிலைக்கு ஆளாகி விடுவார்கள். அதனால் தங்களது மார்கெட்டை தக்கவைத்து கொள்ள படாதபாடு பட்டு எப்படியாவது ஏணி மேல ஏறி கரையேறி வந்துவிடுவார்கள்.

நடிகைள் மார்க்கெட் இருக்கும்போதே நல்லதொரு இடத்தை பிடித்து விடவேண்டும். அப்படி மார்க்கெட் இருந்தபோதும் எத்தனையோ நடிகைகள் காணாமல் போன கதைகள் ஏராளம் உண்டு.முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டு இருந்த காஜல் அகா்வாலை எடுத்துக்காட்டாக
சொல்லலாம். இப்போது அவா் மார்க்கெட்டும் இருந்தும் படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் படவாய்ப்புக்கள் அமையாத காரணத்தால் தன்னுடைய பிசினஸ்ஸை கவனித்துக்கொண்டு இருக்கிறார். இவா் ஆந்திராவில் துணிக்கடைகளை மேற்பார்வை செய்து வருகிறார்.

இந்நிலையில் காஜல் அகா்வாலுக்கு தீராத ஆசை ஒன்று உள்ளதாம். அதுபற்றி கூறியதாவது, சினிமாவுக்கு வந்ததிருந்தே அவருக்கு எப்படியாவது விண்வெளி வீராங்கனை கேரக்டரில் நடித்து விட வேண்டும் என்பது தான் அந்த ஆசை. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப்பெண் வீராங்கனை கல்பனாசாவ்லாவை போல உள்ள கதாபாத்திரத்தில் ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்ற அந்த ஆசை இன்னும் நிறைவேறாமலேயே இருக்கிறது. அப்படி விண்வெளி வீராங்கனை உள்ள ஒரு கதை அமைந்தால் கண்டிப்பாக அதில் நிச்சயமாக நடிப்பேன் என்று கூறியுள்ளார் காஜல்.