ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

காஜலுக்கு கணவராக என்ன தகுதி இருக்க வேண்டும்?

12:23 மணி

ஒரே நேரத்தில் இளையதளபதி விஜய்யின் ‘மெர்சல்’ மற்றும் தல அஜித்தின் ‘விவேகம்’ ஆகிய இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்துவரும் அதிர்ஷ்டகார நடிகை காஜல் அகர்வால். இவர் சமீபத்தில் தனது சினிமா அனுபவம் மற்றும் தனக்கு கணவராக வர என்ன தகுதி வேண்டும் என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

“நான் சினிமாவில் அறிமுகமானபோது ஒன்றிரண்டு படங்களில் நடித்து திரையில் தலைகாட்டினால் போதும் என்று இருந்தேன். அதிகமான படங்களில் நடித்து அதிக நாட்கள் சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது இல்லை. ஆனால் என்னுடைய அதிர்ஷ்டம் 11 வருடங்களாக சினிமாவில் நீடிக்கிறேன். இதுவரை 50 படங்களில் நடித்து விட்டேன். இதற்கு முக்கிய காரணம் எனது உழைப்பு. கடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

எனது வாழ்க்கையில் மிக சிறந்த மனிதர் இவர்தான் என்று ஒருவரை பார்த்ததும் எப்போது எனக்கு தோன்றுகிறதோ அப்போது அவரை காதலித்து திருமணம் செய்து கொள்வேன். எனக்கு கணவராக வரப்போகிறவர் எந்த துறையில் பணியாற்றினாலும் அந்த துறையில் திறமையானவராக இருக்க வேண்டும். அழகு விஷயத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் 6 அடி உயரத்துக்கு குறைவாக இருக்கக்கூடாது”.

(Visited 31 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393