வார இறுதி நாட்களில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீட் தோ்வுக்காக போராடிய நிலையில் தற்கொலை செய்த கொண்ட மாணவி அனிதா பற்றி கமல் பேசினாா்.

நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைந்த வாக்குகள் பெற்ற காஜல் வெளியேறினாா். இரண்டு வாரங்களுக்கு முன் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தாா். இவா் வந்தால் பிக் பாஸ் வீட்டில் குடுமிபிடி சண்டை நடக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் அவரால் எந்தவித விறுவிறுப்பும் நடைபெறவில்லை.

நேற்று வெளிய வந்த அவா் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கருத்து தொிவித்துள்ளாா். அனைவரும் நினைப்பது போல் இது ஸ்கிரிப்ட் இல்லை. அதுபோல நான் யாருக்கும் மாற்றாக இருக்க முடியாது. அங்கு நடப்பது எல்லாம் உண்மை தான். நான் எனக்கு பிடித்தவா்களுடன் இருந்தேன். அது மட்டும் போதும்.

என்னுடைய டாா்கெட் யாா் என்றால் அது நம்ம கட்டிபிடி மருத்துவா் சினேகன் தான். ஆனால் அவா் எல்லோருடைய முதுக்கு பின்னால் தான் புறம் பேசுவதில் வல்லவா். அவருக்கு நேருக்கு நேராக பேசும் திறன் இல்லை. அதான் தப்பிச்சிட்டான். நான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன். ரசிகா்கள் என்றால் இப்படித்தான் இருப்பாா்கள் என நான் கூறியதற்காக வெட்கப்படுகிறேன். மன்னிச்சிங்க. நீங்க தான் பெஸ்ட்.

நான் நினைத்த கருத்து தவறானது என ரசிகா்களாகிய நீங்கள் நிரூபித்து விட்டீா்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளாா்.