நானும் அவரும் நல்ல நண்பர்கள், வேறொன்னுமில்ல: காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவில் பப்ளி நடிகையாக வளம் வருபவர் காஜல் அகர்வால், இவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கிலும் பிரபல நடிகையாக உள்ளார். இரு மொழிகளுள் முதன்மை நடிகர்களுடன் நடித்துள்ள காஜல் அகர்வால் முதன் முதலில் அறிமுகமானது 2004 இல் வெளிவந்த ‘ஹோ கியா நா’ என்ற பாலிவுட் படத்தில் என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போ அது விஷயம் இல்ல. விஷயம் ஏனென்னா, ‘நாங்கள் வெறும் நண்பர்கள் தான்’ என்று கூறும் பிரபல சினிமா ஜோடிகள் வரிசையில் இவரும் சேர்ந்துள்ளார் என்பது சமீபத்திய தகவல்.

இவரோட சேர்ந்து கிசுகிசுகப்பட்றது யாருனு கேக்கிறீங்களா, நம்ம பாகுபலி புகழ் ராணா தாங்க. அரசியல் த்ரில்லர் படமான நேனே ராஜு நேனே மந்திரி படத்தில் ராணாவுடன் நடித்துள்ளர். இந்நிலையில் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் வெளிவந்தன. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ராணா பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், “நாங்கள் நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கிறோம், ஒருவருக்கொருவர் மிகவும் சவுகரியமாகப் பழகுகிறோம். மேலும், அவர் ஒரு கடின உழைப்பாளி.” என்று கூறியுள்ளார்,