காஜலின் இந்த ஆசை நிறைவேறுமா?

காஜல் அகா்வால் தமிழில் முதன்முதலில் பழநி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தாா். ஆரம்ப கால தமிழ்படங்கள் பெரிதாக அவருக்கு கை கொடுக்காததால் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். அங்கு கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டார். முன்னனி நட்சத்திரமாகவும் திகழ்ந்து வருகிறார். தெலுங்கில் அவர்  நடித்த சூப்பர்ஹிட் படமான மகதீரா தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு இங்கும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் விஜய் நடித்த துப்பாக்கி அவருக்கு தமிழில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடந்து சூர்யா,கார்த்தி,அஜீத் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் நடித்தார். தற்போது அவரது ஆசை ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதுதானாம். எப்படியாவது அவருடன்  நடித்துவிடவேண்டும்  என்றும், விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிகொண்டிருக்கிறார்.