தனுஷ் படத்தில் நடித்ததால் கஜோலுக்கு மிரட்டல் விடுத்த மத்திய அரசு

தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஐபி 2’ திரைப்படம் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த கஜோலுக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் கடந்த சில ஆண்டுகளாக பிரசார் பாரதி போர்டு உறுப்பினர் பதவியை வகித்து வருகிறார். ஆனால் சமீபத்தில் கூட்டப்பட்ட உறுப்பினர் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளாமல் ‘விஐபி 2’ படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம்

மூன்று முறை போர்ட் உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால்  பிரசார் பாரதி போர்டு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதால் அவரை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் கஜோல் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.