கோலிவுட் திரையுலகில் ஸ்டிரைக் நடந்து கொண்டு இருப்பதால் கடந்த ஒரு மாதமாக புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. எனவே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர்களில் பழைய ஹிட் படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆகி வருகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன், அம்பிகா, சத்யராஜ் நடித்த ‘காக்கி சட்டை’ திரைப்படம் 30 வருடங்களுக்கு பின்னர் புதுப்பொலிவுடன் மீண்டும் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சத்யாமூவீஸ் தயாரித்த இந்த சூப்பர் ஹிட் படத்தை ராஜசேகர் இயக்கியிருந்தார். இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த படம் கமல் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது