கபாலி படத்தின் வெற்றியை அடுத்து பா.ரஞ்சித் ரஜினி வெற்றி கூட்டணி இணைந்துள்ள படம் காலா. இந்த பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி, நாயகியாக நடித்துள்ளார். இவா் கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தில் அறிமுகமானார். இதை தொடா்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வர இருப்பதால் தென்னிந்தியா பக்கம் வர இருக்கிறாராம். இந்நிலையில் காலா படத்தில் நடித்தத போது ரஜினி பற்றிய விஷயங்களை தற்போது பெருமையாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  திகில் கிளப்ப வரும் ஐரா 'நயன்தாரா! டீசர் இன்று மாலை வெளியீடு

ரஜினியுடன் காலா படத்தில் நடித்து வந்த போது அவருடைய எளிமை தன்னை மிகவும் வியக்க வைத்ததாகவும், ஒரு மகளைப் போலவே அவா் தன்னிடம் பாசம் காட்டியதாகவும் கூறியனார் ஹூமாகுரேஷி. மேலும் தனது வீட்டில் இருந்தே படப்பிடிப்பு தளத்துக்கு உணவு வரவைத்து தனக்கு ரஜினி விருந்து கொடுத்ததை பெருமையாகச் சொல்லியிருக்கிறார். தென்னிந்திய படங்களில் நடிப்பதில் தான் ஆா்வமாக இருப்பதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் மரபு, கலாச்சரங்கள் தனக்கு மிகவும் பிடிப்பதோடு, அதை நேசிப்பதாக கூறும் ஹூமா குரேஷி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பது பற்றி சில டைரக்டர்கள் பேசி வருவதாகவும் சொல்லுகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  சன்பிக்சர்ஸ் வெளியிட்ட 'பேட்ட' சிங்கிளின் லேட்டஸ்ட் அப்டேட்!