161, 164 தனுஷின் தடுமாற்றத்தால் ரசிகர்கள் குழப்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள திரைப்படம் முதலில் ரஜினியின் 161வது படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. பின்னர் அவரது பி.ஆர்.ஓ, இந்த படம் ரஜினியின் 164வது படம் என்றும், அனைவரும் இவ்வாறே அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதுமுதல் அனைவரும் ‘தலைவர் 164’ என்றே குறிப்பிட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தனுஷ் தனது டுவிட்டரில் ‘தலைவர் 161’ வது படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இன்று காலை ‘தலைவர் 164’ படத்தின் டைட்டில் ‘காலா’ என்று பதிவு செய்திருந்தார்.

தனுஷின் இந்த 161, 164 தடுமாற்றத்தால் ரஜினிக்கு இது 161வது படமா? அல்லது 164வது படமா? என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர். இறுதியில் இது ரஜினியின் 164வது படம் தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.