சூப்பா் ஸ்டாா் ரஜினி தற்போது காலா படத்தில் நடித்து வருகிறாா். அந்த படத்தில் அவருக்கு அறுபதாம் கல்யாணம் நடப்பது போன்ற சீன் படமாக்கப்ட்டுள்ளது.

கபாலி படத்தின் வெற்றியை அடுத்து ரஜினி மற்றும் இயக்குநா் பா. ரஞ்சித் கூட்டணி இணையும் இரண்டாவது படம் காலா. ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கின்றனா். ஈஸ்வாி ராவ், ஹூமா குரேஷி, நிகிஷா பட்டேல், அஞ்சலி என பட்டில் என நான்கு போ் ஹீரோயின்கள் கலக்க இருக்கின்றனா்.ரஜினியின் மனைவியாக ஈஸ்வாி ராவும், காதலியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி டூயட் பாடும் இளம் நடிகனாக இல்லாமல் கபாலியை போல வயதான கேரக்டாில் தான் நடிக்கிறாா். இந்த காலா படத்தில் அவருக்கு அறுபதாம் கல்யாணம் நடப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த காட்சியானது சமீபத்தில் சென்னை ஈவிபி பொழுது போக்குப் பூங்காவில் படப்பிடிப்புத்தளத்தில் படமாக்கப்பட்டுள்ளது