சர்க்கார் படப்பிடிப்பை அமெரிக்காவில் முடித்த விஜய் இன்று அதிகாலை கலைஞரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

அமெரிக்காவில் இருந்து 22 மணி நேர பயணத்திற்கு பின் சென்னை வந்தார் விஜய். கலைஞரும் விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கிய சட்டம் ஒரு விளையாட்டு, நீதிக்கு தண்டனை உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் என்பதும் ஆரம்பகாலத்தில் இருந்தே விஜய் நடிகர் ஆவதற்கு முன்பே விஜய், அவரது குடும்பம் மீது பிரியம் உள்ளவர் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.