கமல்ஹாசன் கலைஞருக்கு மெரினாவில் மரியாதை மறுக்கப்படுவது தொடர்பாக அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அண்ணா இருந்தபோது கழகம் காத்திட வளர்த்த இரு தம்பிகள் கலைஞரும் எம்.ஜி.ஆரும் அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு. எம்.ஜி.ஆருக்கு பின் கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு அந்த மாண்பு இல்லாதது சோகமே எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால் கண்டிப்பாய் அண்ணாவின் பக்கத்தில் கலைஞரை கிடத்தியிருப்பார்.