இசையமைப்பாளர் இளையராஜா ஆஸ்திரேலியாவுக்கு தான் நடத்தும் மியூசிக் கான்செர்ட்டுக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் கலைஞர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தார் இளையராஜா.

இளையராஜாவுக்கு இசைஞானி பட்டம் கொடுத்ததே கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது பல வருடங்கள் முன்பு காரைக்குடியில் பழ.கருப்பையா அவர்களின் ஏற்பாட்டின்படி இசைஞானி என்ற பட்டத்தை இளையராஜாவுக்கு கலைஞர்தான் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=xHPcfXdGQEQ

இந்நிலையில் இளையராஜா ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு இரங்கல் வீடியோவை வெளியிட்டுள்ளார் அதில்  நீண்ட நாட்களுக்கு முன்பே இது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி என்பதால் அதனால் இதை கேன்சல் செய்துவிட்டு வர முடியவில்லை.

அய்யா கலைஞர் மறைவு வருத்தமளிக்கிறது தமிழின் கடைசி சுத்தமான சினிமா எழுத்தாளர் என்றும் கடைசி அரசியல் தலைவர் என்றும் அதில் உருக்கமாக பேசியுள்ளார்.இந்த துக்கத்தில் இருந்து நாம் எப்படி மீண்டு வரப்போகிறோம் என தெரியவில்லை என கூறியுள்ளார்.