இயக்குனர் கலைப்புலி தாணு பிரமாண்டத்துக்கு பெயர் போனவர், பல வித பிரமாண்ட படங்களை தயாரித்தவர். 30 வருடம் முன் வந்த புதுப்பாடகன் படத்துக்கு மிக நீளமான சாதனை கட் அவுட் எல்லாம் வைத்து அசத்தியவர் இவர்.

யார் படத்தில் ஆரம்பித்து, கிழக்கு சீமையிலே, கபாலி, தெறி என பலவிதமான படங்களை தயாரித்தவர் இவர். ஆளவந்தான் இவர் தயாரித்த பிரமாண்ட படங்களில் ஒன்று.

இந்நிலையில் இவர் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ் என்று பலர் நடிக்க ராதா மோகன் இயக்கத்தில் 60 வயது மாநிறம் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தன் மனம் கவர்ந்த படமாக இருக்கும் என கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார் கிழக்கு சீமையிலே படத்துக்கு பிறகு தான் தயாரிக்கும் உருக்கமான படம் என்ற ரீதியில் கலைப்புலி தாணு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்