’காக்க காக்க 2’ படத்தை சூர்யா-ஜோதிகாவை  வைத்து கௌதம் மேனன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கடந்த 2003 ல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற படம் ‘காக்க காக்க’. நடிகர் சூர்யாவிற்கு இப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.

இந்நிலையில் தற்போது காக்க காக்க படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தானு,படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குமாறு கௌதம் மேனனிடம் கேட்டிக்கொண்டுள்ளார்.அதற்கு கௌதம் ஒப்புக்கொண்டு கதையை எழுதி வருவதாகவும்,முதல் பாகத்தில் நடித்த சூர்யா-ஜோதிகா ஜோடியே இரண்டாம் பாகத்தில் நடிக்க போவதாக தகவல் கசிந்துள்ளது.ஹாரிஸ் ஜெயராஜ் தான் இந்த இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இச்செய்தியை கேட்ட சூர்யா ரசிகர்கள் ’காக்க காக்க 2’ படம் விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.