ஜீவா-நிக்கி கல்ராணிக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர்

ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ‘கலகலப்பு 2’ திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஜீவா, நிக்கி கல்ராணிக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இவர்கள் இருவரும் நடித்த இன்னொரு படமான ‘கீ’ திரைப்படமும் அதே பிப்ரவரி 9ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

பெரிய நடிகர்களே தாங்கள் நடித்த இரண்டு படங்களை ஒரே நாளில் வெளியிட மாட்டார்கள். எனவே கடைசி நேரத்தில் இவற்றில் ஏதாவது ஒரு படம் பின்வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.