சூப்பா் குட் பிலிம்ஸ் நிறுவனம் பல நடிகா்கள் வளர காரணமாக இருந்தது. அதன் தயாரிப்பாளா் ஆா்.பி சௌத்ரியின் மகனான ஜீவா சினிமா உலகுக்கு வந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கடந்து விட்டது. அவா் முன்னணி ஹீரோவாக இன்னும் ஜொலிக்க முடியாமல் தவித்து வருகிறார். அவா் நடித்த த்ரில்லர் மூவி சங்கிலி புங்கிலி கதவ தொற படம் ஹிட் கொடுக்கும் என்று நினைத்தால் அது கூட அவருக்கு கைகொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது கலகலப்பு 2ல் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  அஜித் ரசிகர்கள் சிவாவிற்கு போட்ட கட்டளை

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா.ஜெய் நிக்கி கல்ரானி மற்றும் கேத்ரினா நடித்த படம் கலகலப்பு 2. நாளை வெளியாகும் இந்த படத்தை யார் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ ஜீவாவுக்கு மிக முக்கியமான படமாகும் இது. காரணம் அவரது தொடர் தோல்விகளே. என்றென்றும் புன்னகை படத்தை அடுத்து வந்த அவரது படங்கள் அனைத்துமே தோல்வியை தழுவின. எனவே இந்த படமாவது அவரது தொடர் தோல்விகளுக்கு முற்றுபுள்ளி வைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

இதையும் படிங்க பாஸ்-  அஜித்தை அடுத்து விஜய்யை டார்கெட் செய்யும் சிறுத்தை!