சுந்தர் சி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த கலகலப்பு படமானது ரசிகா்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. நல்ல கலகலப்பான காமெடி படமாக அமைந்தது. இதில் விமல், சிவா, அஞ்சலி, ஒவியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படமானது சூப்பர் ஹிட்டையை கொடுத்தது. மிகப்பெரிய ஹிட்டை கொடுத்த கலகலப்பு படம் இயக்குநா் சுந்தர்.சியின் 25வது படம்.

இந்த வெற்றியை தொடா்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரானது. கடந்தாண்டு அக்டோபா் மாதம் கலகலப்பு இரண்டாம்பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.இதில் ஜீவா,ஜெய், சிவா, நிக்கி கல்ராணி மற்றும் கேத்தரின் தெரஸா உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த கலகலப்பு 2 படத்தை குஷ்பு தயாரிக்கிறார். இதை சுந்தா் சி இயக்குகிறார். இந்த படத்தின் ட்ரைலா் வெளியாகியது. கலகலப்பு 2 படத்தின டிரைலா் வெளியாகி ரசிகா்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கலகலப்பு 2 பிப்ரவரி 9ஆம் தேதி ரீலிஸ் ஆக இருக்கிறது.