களவாணி 2 படத்தின் ரிலிஸுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ள நிலையில் படத்தின் இயக்குனர் சற்குணம் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தனக்குக் கொலைமிரட்டல் விடுவதாகப் புகார் அளித்துள்ளார்.

விமல், ஓவியா, சரண்யா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள களவாணி 2 திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலிஸுக்குத் தயாராகியுள்ளது. இந்நிலையில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜூன் 10 ஆம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.

இதையும் படிங்க பாஸ்-  கன்பாஃர்ம் ஆன காதல்: ஆரவுடன் பாங்காக்கில் ஊர் சுற்றும் ஓவியா

இந்தப்படத்தின் தயாரிப்புக்காக நடிகர் விமல் தன்னிடம் 4.5 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதற்குப் பதிலாக படத்தின் தலைப்பு உரிமை மற்றும் விநியோக உரிமையை விற்றுள்ளதாகவும் சிங்காரவேலன் குறிப்பிட்டார். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் நான் தான் என்று இயக்குனர் சற்குணம் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  ஓவியாவை திருமணம் செய்வதாக வெளியான செய்தி - சிம்பு விளக்கம்

அதன் பிறகு இப்போது சிங்காரவேலன் தனக்குக் கொலை மிரட்டல் விடுவதாக சற்குணம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதில்  ’களவாணிப் படத்தின் தயாரிப்பாளர் விமல்தான் என்பதுபோல போலிப் பத்திரங்களை தயார் செய்து, படத்தின் தலைப்பு மற்றும் விநியோக உரிமையை அவருக்கு விற்றது போல போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்’ எனப் புகாரில் கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பாளர் சிங்காரவேலனிடம் கடன் வாங்கியதாக சொல்லப்படும் விமல் அது பொய் என்றோ உண்மை என்றோ இதுவரையில் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.