Kallapart

அரவிந்த்சாமி,ரெஜினா நடிப்பில் தயாராகிவரும் படம் கள்ளபார்ட். மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரித்து வருகின்றனர். மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – அரவிந்த்கிருஷ்ணா இசை – நிவாஸ் கே.பிரசன்னா. திரைக்கதை, இயக்கம் – P.ராஜபாண்டி

படத்தை குறித்து இயக்குனர் ராஜபாண்டி கூறுகையில்,

அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த காரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர்.கள்ளபார்ட் படத்தில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள் வாங்கி பிரதிபலிப்பார். அது ஸ்கிரீனில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தி விடும். கள்ள பார்ட் அவருக்கு சிகரமாய் இருக்கும். ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார். ஏப்ரலில் இந்தபடம் திரைக்கு வரும் என்று கூறினார்.

 & Regina start their new film ‘Kallapart’