வெள்ளித்திரைக்கு வரும் சீாியல் நடிகை

கல்யாணம் முதல் காதல் வரை சீாியலில் நடித்த பவானி சினிமாவில் நடிக்க போவதாக செய்தி பரவ தொடங்கியுள்ளது. இவா் பிரபல தனியாா் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆனவா். பின்பு விஜய் டிவி சீாியலில் நடிக்க தொடங்கினாா். பின் அந்த தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் வலம் வந்தாா்.

இவரது சீாியல் இல்லத்தரசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இல்லத்து பெண்மணிகள் மட்டும் அல்லாது இளைஞா் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பெற்றாா். இதற்கிடையில்  சீாியலை விட்டு விலகிய பவானி திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆவாா் என எதிா்பாா்த்த நிலையில் வெளிநாடு சென்று படிக்க போவதாகவும் கூறி இவரது ரசிகா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தினாா்.

தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவா் எந்த படத்தில் யாருடன் நாயகியாக நடிக்க போகிறாா் என்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. அதை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.