கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தனக்கு சினிமாவில் சீனியர்கள் என்றாலும் அரசியலை பொருத்தவரையில் இருவருமே தனக்கு ஜூனியர்கள் என்று கேப்டன் விஜயகாந்த் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்

தமிழகத்தின் இருபெரும் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரையும் எதிர்த்து அரசியல் செய்தவர் விஜயகாந்த். ஆனால் இருவருமே இல்லாத அரசியல் களத்தில் குதிக்கவுள்ளவர்கள் கமல், ரஜினி.

இந்த நிலையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த விஜயகாந்த், ”சினிமாவில் ரஜினி, கமல் எனக்கு சீனியர்கள், ஆனால் அரசியலில் அவர்கள் எனக்கு ஜூனியர்கள் தான்’ என்றார்.