1996-யில் ஷங்கர் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘இந்தியன்’. ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் நடித்திருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இப்போது இதே காம்போவில் ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. இதில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட போஸ்டர்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் கமல், இயக்குநர் ஷங்கர் இருவருக்குமே ரூ.40 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.