கேரள தோட்ட தொழிலாளர் ராகேஷ் உன்னி என்பவர் உன்னை காணாத நாளில்லை என்ற விஸ்வரூபம் படப்பாடலை சரியான சந்தத்தோடு பாடி பேஸ்புக்கில் புகழ்பெற்றார் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

ஓவர் நைட்டில் இவர் பாப்புலர் ஆகி விட்டார் என்று சொன்னால் மிகையாகாது. அடுத்து வரும் படங்களிலும் பாடவிருக்கிறார்.

இந்த நிலையில் இன்று கமலஹாசனையும் இவர் சந்தித்து இந்த பாடலை பாடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தன் ஆதர்ஸ கலைஞனை நேரில் பார்த்த ராகேஷுக்கு முதலில் சில நொடிகளுக்கு பேச்சே வரவில்லை.

‘எனிக்கி பறயான் அறியில்லா ஸாரே!’

தொண்டை வறண்டு, எச்சில் முழுங்கியபடி சொன்னர் ராகேஷ்.

‘பறயண்டா! பாடியாள் மதி!’ என்றார்.