நடிகர் கமல்ஹாசன் இன்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்திருந்தது குறித்து இணையதளங்களில் பாராட்டு மழை குவிந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான ‘மெர்சல்’ படத்தில் வெளிநாட்டு பாராட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் விஜய் கலந்து கொள்ளும் காட்சியில் வேட்டி அணிந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டையும் ஒப்பிட்டு கமலுக்கு முன்னோடியே விஜய்தான் என்று அவரது ரசிகர்கள் டுவீட் பதிவு செய்து வருகின்றனர். இதனால் கமல், விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.