தமிழகமெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை பலரும் பார்க்க கமலும் ஒரு காரணம். அவர் தொகுத்து வழங்குவதால் கூடுதல் பலம் அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளாது என்பதே உண்மை. இந்த நிகழ்ச்சியை பிரபல செல்போன் நிறுவனம் அதிக தொகை கொடுத்து ஸ்பான்சர் செய்துள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கும், அந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காரணம் ஸ்பான்சர் பெயரை நிகழ்ச்சியில் அடிக்கடி கூற சொல்கிறார்களாம். ஆனால் கமலுக்கு அது பிடிக்கவில்லை. தொடந்து தொலைக்காட்சி நிறுவனம் வற்புறுத்தவே கமலுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்படி இருந்தாலும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திவருகிறார் கமல்ஹாசன் என்பது அனைவரும் அறிந்ததே